செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 20 மே 2022 (18:17 IST)

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

sindhu
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்துவும் காலிறுதியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று காலிறுதி போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனை யமகுச்சி உடன் மோதினார் 
 
இந்த போட்டியில் பிவி சிந்து 21-15, 20-22, 21 - 13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்
 
நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை உடன் பிவி சிந்து மோதவுள்ளார் என்பதும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது