வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (08:00 IST)

ஆஷஸ் தொடர்: கஷ்டப்பட்டு டிரா செய்தது ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 14ம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கி 77.1 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது 
 
இதனை அடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 94.3 ஓவர்களில் 250ரன்கள் எடுத்தது. 8 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கி 258 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 261 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அந்த அணி 47.3 ஓவர்களில் 154 ரன்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த நிலையில் போட்டி டிரா ஆனதாக நடுவர்கள் அறிவித்தனர்
 
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 2வது இன்னிங்சில் மிக அபாரமாக விளையாடி 115 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 258/10
 
பர்ன்ஸ்: 53
பெயர்ஸ்டோ: 52
டென்லி: 30
 
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 250/10
 
ஸ்மித்: 92
காவாஜா: 36
பெயின்: 23
 
இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ்: 258/5 டிக்ளேர் 
 
பென் ஸ்டோக்ஸ்: 115
பட்லர்: 31
பெயர்ஸ்டோ: 30
 
ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ்: 154/6
 
லாபுசாங்கே: 59
ஹெட்: 42
பான்கிராப்ட்:16
 
ஆட்டநாயகன்: பென் ஸ்டோக்ஸ்
 
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது