வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (18:45 IST)

இந்திய அணியின் பயிற்சியாளர் யார்? கபில்தேவ் அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும் அரையிறுதிப் போட்டியில் கோட்டை விட்டது. இதனால் இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது
 
இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மாற்றப் பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில் இன்று மும்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வுக்கான கூட்டம் கூடியது. முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில்தேவ் மற்றும் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் தலைமையில் கூடிய இந்த கூட்டத்தில் ரவி சாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளராக நீடிப்பார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அவரை அடுத்து மைக் ஹாசன், டாம் மூடி ஆகியோர்களும் பயிற்சியாளராக இருப்பார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
 
ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக வரும் செப்டம்பர் மாதம் முதல் வரும் 2021ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டி வரை நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. ரவி சாஸ்திரியே மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி மேலும் பல சாதனைகள் நிகழ்த்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்