புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (13:27 IST)

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார்? கபில்தேவ் அண்ட் கோ தேர்வு செய்தது யாரை?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற தகவலை கபில்தேவ் தலைமையிலான குழு இன்று மாலை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 
 
விண்ணப்பங்களின் கால அவகாசம் முடிந்து இன்று தலைமை பயிற்சியாளர் தேர்வு நடைபெறுகிறது. தேர்வாகியுள்ள டாம் மூடி, மைக் எஸ்ன், கேரி கிர்ஸ்டன், ஜெயவர்த்தனே, ராபின் சிங் லால்சந்த ராஜ்புத் ஆகியோரிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டு இன்று மாலை 7 மணிக்கு கபில்தேவ் தலைமையிலான குழு புதிய பயிற்சியாளர் யார் என்பதை அறிவிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக நீடிக்க வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.