திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2019 (17:24 IST)

காஷ்மீர் டியூட்டி ஓவர்: டெல்லி திரும்பிய தோனி!!

காஷ்மீர் ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்ட தோனி தற்போது டெல்லி திரும்பியுள்ளார். 
 
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்ய தாமதித்த போது தோனியின் ஓய்வு குறித்தும் அவர் இந்திய அணியின் சேர்க்கப்பட மாட்டார் எனவும் பல செய்திகள் வெளியாகின. 
 
ஆனால், தோனியோ துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். 
 
பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கு தோனி கடந்த மாதம் காஷ்மீர் சென்று அங்கு ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார். தற்போது அப்பணியை முடித்து விட்டு டெல்லி திரும்பியுள்ளார்.