12 மாதங்களில் இந்திய அணிக்கு 5 கேப்டன்கள்
உலகக் கிரிக்கெட் அரங்கில் இந்திய அணிக்கு என இடம் உள்ளது. சில ஆண்டுககளுக்கு ஆஸ்திரெலிய கிரிகெட் அணிபாண்டிங் தலைமையில் ஜொலித்து போல் இந்திய அணி உருவெடுத்துள்ளது. இதற்கு சமீத்திய வெற்றிகளும் காரணம்.
இதற்கிடையே இந்திய அணியின் வெற்றிகரனமான கேப்டனாகவும் சூப்பர் பேட்ஸ்மேனாகாவும் ஜொலித்த விராட் கோலி உலகக் கோப்பை தொடரில் இருந்து பெரிதாக சோபிக்கவில்லை.
அத்துடன் அவருக்கும் பிசிசிஐ தலைவர் கங்குலிக்கும் கருத்து மோதல் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
இதனையடுத்து, தற்போது தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் கே.எஸ்.ராகுல் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேபோல் இலங்கைக்கு எதிரான தொடரில் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரொஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டர்.
எனவே கடந்த 12 மாதங்களில் இந்திய அணிக்கு 5 பேர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.