1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (17:40 IST)

இந்திய அணியின் துணை கேப்டன் இவர் தான் !

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணியின் துணைக் கேப்டனாக  கே.எல்.      ராகுல் நியமிக்கப்பட்டுள்ளனர்.                                                                                                                                                                                                                                                                      
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவை சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒமிகிரான் வைரஸ் பரவி வருவதை அடுத்து இந்திய அணிக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய ரோஹித் சர்மாவுக்கு பதிலாக துணைக்கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.