1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (22:07 IST)

u19உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

வரும் 2022 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள 19 வயதிற்குட்பட்ட இளையோர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு வெஸ்ட் இண்டீஸில் 19 வயதிற்குட்பட்ட இளையோர் உலகக் கோப்பை தொடர் நடக்கவுள்ள நிலையில், இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதில், யாஷ் துல், ஹர்னூர் சிங், ரகுவனிஷ், ரஷீட், நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனீஷ்வர் கவுதம், தினேஷ் பானா, ஆராத்யா யாதவ், ராஜ் பாவா, மான்வ்  பிரகாஷ், கவுசல் டம்பி, ஹங்கார்கர், வாசு வாட்ஸ், விக்கி ஓட்ஸ்வெல், ரவிக்குமார், சாங்வன் உள்ளிட்டோர் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.