வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (22:15 IST)

டி-20 உலகக்கோப்பை: இந்திய அணி சூப்பர் வெற்றி

ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்திய அணிக்கு எதிரான ஸ்காட்லாந்து அணி விளையாடி வருகிறது.

இதில், பல போட்டிகளுக்குப் பின் இன்று டாஸ் வென்ற கேப்டன் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 17.4 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணிக்கு 85 ரன்கல் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்த எளிய இலக்கை  நோக்கு களமிறங்கிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 2  விக்கெட்டுகள் இழப்பிற்கு  89 ரன்கள் எடுத்து சூப்பர் வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தான் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்திலும், நியூசிலாந்து 2 ஆம் இடத்திலு, இந்திய அணி 3 வது இடத்திலும் உள்ளது. எனவே இந்தியாவுக்கு அரையிறுதிக்கான வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.