செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 டிசம்பர் 2021 (09:35 IST)

அதற்கு மட்டும் நான் பதில் சொல்லமாட்டேன்… நழுவிய ராகுல் டிராவிட்!

தென் ஆப்பிரிக்கா தொடரில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட்டையும், இந்திய கிரிக்கெட் அணியையும் சர்ச்சையில் சிக்க வைத்த ஒரு விஷயம் கேப்டன் கோலியின் பதவிப்பறிப்புதான். இது சம்மந்தமாக கங்குலி ஒரு கருத்தை சொல்ல அதற்கு மாற்றாக விராட் கோலி ஒரு கருத்தை சொல்ல ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா தொடரில் இப்போது கவனம் செலுத்தி வரும் ராகுல் டிராவிட்டிடம் இதுபற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது ‘இதுபற்றி நான் தேர்வுக்குழுவிடம் என்ன ஆலோசித்து இருந்தாலும் அதை ஊடகத்திடம் பகிர்ந்துகொள்ள மாட்டேன்’ எனக் கூறியுள்ளார்.