1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Gold Price in Chennai

ஒரே நாளில் ரூ.608 குறைந்த தங்கம்! – இன்றைய விலை நிலவரம்!

Tamilnadu
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று பெருமளவில் விலை குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.  

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 குறைந்து ரூ.34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.76 குறைந்து ரூ.4,266-க்கு விற்பனை ஆகிறது. 
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தேர்தலுக்கு ஆயத்தமாகும் தூங்க நகரம்!