வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 1 மார்ச் 2021 (23:55 IST)

தலையே போனாலும் தலைகுனிய விடமாட்டோம் - விஜயகாந்த் மகன் பேச்சு

தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம் என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேதிமுக கூட்டணி வைத்தது. ஆனால் தோல்வியைத் தழுவியது. பின்னர் தேமுதிக மற்றும் அதிமுக இடையே அவ்வப்போது கருத்து 
 
வேறுபாடு இருந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி அதிமுவுடன் கூட்டணி வைக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்த தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த நிலையில்,
விஜயகாந்த் தலைமையிலான அக்கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது
.
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள்சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் தேமுதிக தலைவர் உடல்நலக்குறைவுடன் இருந்தாலும் தன் கட்சிக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். எனவே, அக்கட்சிக்கு தேவையான தொகுதிகளை அதிமுக ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனமே பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் பொருந்திப்போகாத நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலைபோலவே இருகட்சிகளும் அதிமுககூட்டணியில் உள்ளது.
சமீபத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டு அதிமுக ஆட்சியில் சட்டசபையில் இட இதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. இது தற்காலிகமானது என முதல்வர் கூறியநிலையில்,பாமகவுக்கு வரும் சட்டசபைத்தேர்தலில் 23 தொகுதிகள் ஒதுக்கியது.
 
அதேசமயம் தேமுதிகவுக்கு அதேபோல் கௌரவமான தொகுதிகள் ஒதுக்காத பட்சத்தில் எதிர்க்கட்சியாக இருந்த அக்கட்சிக்கு பெரும் கவுரவ குறைச்சல் உண்டாகும் என் நினைப்பதுபோல் தெரிகிறது
 
எனவே வரும் தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டியிட அக்கட்சின் தலைவர் விஜயகாந்த் முடிவு எடுத்துள்ளதாக அக்கட்சியின் துணைச்செயலாளர் சுதீஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
எனவே வரும் தேர்தலில் தேமுதிக தனித்துப்போட்டியிட அக்கட்சின் தலைவர் விஜயகாந்த் முடிவு எடுத்துள்ளதாக அக்கட்சியின் துணைச்செயலாளர் சுதீஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
இந்நிலையில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக தகவல் வெளியானதும் அக்கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், அதிமுக அமைச்சர்கள் தேமுதிகவுடன் 3 வது கட்ட பேச்சுவார்தைக்குச் சென்ற போது 15 தொகுதிகள்தான் ஒதுக்க முடியும் என கூறியதாகத் தெரிகிறது. இதனால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில் பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சில் கலந்து கொண்டு பேசிய விஜய்காந்தின் மகன் விஜய பிரபாகரன், தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.இன்னும் சில நாட்களில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி தொடருமா இல்லை தனித்துப்போட்டிய என்பது முடிவாகிவிடும் எனத் தெரிகிறது.