தேர்தலுக்கு தயாராகும் சிங்கார சென்னை !!

Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 2 மார்ச் 2021 (08:00 IST)
அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக அங்கீகாரப்பட்ட கட்சிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். இதில்கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், அனைத்து  தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒருங்கிணைப்பு அதிகாரிகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர்  உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
 
இந்த கூட்டத்தில் பேசிய ஆணையர் பிரகாஷ், அச்சகத்தின் பெயர் இல்லாமல் பேனர்,  பிரசுரம் அடிக்க கூடாது என்றும் சென்னையில் 196 இடங்களில் மட்டுமே பொது கூட்டம் நடத்த அனுமதிக்கபடும் எட்ற அவர் பொதுக்கூட்டங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என கட்சியினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
 
80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகள் என தபால் வாக்களிப்பவர்கள் மார்ச் 16ம் தேதிக்குள் 12டி படிவத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்ற அவர் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 1800 425 7012 என்ற எண்ணையும், வாக்களர்களுக்கான  சந்தேகங்களை 1950 என்ற சேவை மையம் மூலம் அறியாலம் என்றார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தொடர்பாக  நடைபெற்ற இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எந்த மாதிரியான நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், பொதுகூட்டம், பேரணி நடத்த அனுமதி வாங்குவது குறித்து அறிவுறுத்தப்பட்டதாக கூறினார்.
 
196 இடங்களில் மட்டுமே பொதுகூட்டம் நடத்த வேண்டும், Suvidha என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே அனுமதி வழங்கப்படும். குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி வாங்க வேண்டும் என்றார். 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், பல்வேறு வகையான மாற்று திறனாளிகள், கொரோனா தொற்று மற்றும் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் ஆகியோருக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது, அவர்கள் 12டி படிவத்தை மார்ச் 16க்குள் வழங்க வேண்டும்.
 
சென்னையில் ஏறக்குறைய 8500 மாற்றுதிறானளிகள், 1லட்சத்து 10 ஆயிரம் பேர் 80 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருப்பவர்கள் என தெரிவித்தார். இதுவரை 2721 போஸ்டர், 9561 சுவர் விளம்பரங்கள், 239 பேனர்கள் என 12,366 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக கூறினார். கொரோனா விதிமுறைகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளுக்கு பொருந்தும் எம்ற அவர் 48 பறக்கும் படை சென்னையில் பணியில் உள்ளது, இதுவரை 10 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :