1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tn govt tender for new bus stand

சென்னையின் புதிய பேருந்து நிலையத்திற்கு டெண்டர்: தமிழக அரசு

kilambakkam
சென்னையின் புதிய பேருந்து நிலையத்திற்கு டெண்டர்: தமிழக அரசு
சென்னையில் கட்டப்பட உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையின் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தற்போது கோயம்பேடு பேருந்து நிலையமாக இருந்து வரும் நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் தற்போது இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக புதிய பேருந்து நிலையம் சென்னை கிளாம்பாக்கம் அருகே கட்டப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின 
 
இந்த நிலையில் செங்கல்பட்டு வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அமைய உள்ள பேருந்து நிலையத்தில் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு டெண்டர் கோரி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மின் இணைப்புடன் கூடிய அடித்தள காற்றோட்ட வசதி, கண்காணிப்பு கருவி உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது அரசு
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மீண்டும் இயக்கப்படும் ராமேஸ்வரம் - குமரி எக்ஸ்பிரஸ்: பொதுமக்கள் மகிழ்ச்சி