1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 18 ஜூன் 2022 (07:50 IST)

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

petrol
சென்னையில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 30 சதவீதம் சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி வருவதால் இந்தியாவில் இப்போதைக்கு போல் டீசல் விலை உயர வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்தது போல் மாநில அரசும் வரியை குறைத்தால் மேலும் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.