கூட்டணி கட்சி இல்லாமல் திமுக ஓட்டு வாங்கியதா?!.. திருமாவளவன் கருத்து!....
திமுகவை பொருத்தவரை விசிக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் பெரும்பாலான தேர்தலை சந்தித்து வந்தது.
2026 சட்டமன்ற தேர்தலிலும் இந்த அனைத்து கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்தது. ஆனால், தவெக வெற்றி பெற்றதால் அந்த கட்சி ஆட்சி அமைப்பதற்காக அந்த கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்துவிட்டன.
இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்ததால்தான் அந்த கட்சிகள் வெற்றி பெற்றன. அந்த கட்சிகளின் ஆதரவை வைத்துதான் விஜய் ஆட்சி அமைத்திருக்கிறார் என்று திமுக பேசியது. ஆனால் கூட்டணி கட்சிகளால்தான் திமுக பல தொகுதிகளிலும் வெற்றி பெற்று வந்தது. கூட்டணி கட்சிகளின் வாக்குகள் இல்லை என்றால் திமுக 10 இடங்களில் கூட வெற்றி பெறாது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையிலேயே கூறினார்.
நடந்த முடிந்த இடைத்தேர்தலில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இரண்டு தேர்தல்களிலும் திமுக 2வது இடத்தை பிடித்திருக்கிறது. இதையடுத்து கூட்டணி கட்சிகள் இல்லாமலேயே நாங்கள் 2வது இடத்தை பிடித்திருக்கிறோம். எனவே திமுக இனிமேல் தனித்து போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளிடம் கருத்து தெரிவித்த திருமாவளவன் அதிமுகவின் வாக்கு வங்கி சரிவுக்கு உட்கட்சி பிரச்சனைகள் காரணம் என நான் நினைக்கிறேன்.. திமுகவுக்கு கிடைத்த வாக்குகள் அதிமுகவிலிருந்து சிதறிய வாக்குகளாக இருக்கலாம்.. அதற்காக பொதுத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் கூட்டணி கட்சிகளால் பெற்ற வாக்குகள் இல்லை என சொல்ல முடியாது.. அப்போது நிலை வேறு.. இப்போது நிலை வேறு என்று கூறியிருக்கிறார்.