1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk minister adhav arjuna comment about sir

இந்த முட்டாள்களுக்கு இது தெரியாதா?.. திமுகவை திட்டிய ஆதவ் அர்ஜுனா!...

adhav arjuna
தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் SIR அமல்படுத்தப்பட்டது. இதனால், இறந்து போனவர்கள், முகவரி மாற்றியவர்கள், SIR விண்ணப்பத்தை நிரப்பி கொடுக்காதவர்கள் என தமிழகத்தில் ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்து தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட்டது. எனவே அதற்கு SIR-தான் காரணம் என திமுக சொல்லத் தொடங்கியது.. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தோற்றுப் போனதற்கே SIR-தான் காரணம் என அக்கட்சி சொல்லி வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘தேர்தல் ஆணையம் தமிழகத்தில் SIR-ஐ அமல்படுத்த உத்தரவிட்டது.. ஆனால் அதை அமல்படுத்தக்கூடிய அதிகாரம் யாரிடம் இருந்தது? நாங்கள் நீதிமன்றத்தில் வாதாடி கொண்டிருந்தோம்.. திமுக எந்த வழக்கையும் நடத்தவில்லை..

திமுக ஆட்சியில் இருந்தபோது ஒரு கோடி வாக்காளர்களை நீக்க வைத்துவிட்டு இப்போது அதனால் நாங்கள் தோற்றோம் என்று சொல்வது எவ்வளவு பெரிய பொய் பிரச்சாரம்.. பெரிய அறிவாளிகள் போல பேசுகிறார்கள்.. அப்போது யார் ஆளுங்கட்சி என இந்த முட்டாள்களுக்கு தெரியாதா?.. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட முட்டாள்தனமான அரசியல் செய்யக்கூடாது’ என அவர் காட்டமாக பதிலளித்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நாம் தமிழர் ஓட்டு இன்னும் எண்ணல!.. சீமான் NGO நடத்தலாம்!.. முஸ்தபா எம்.எல்.ஏ நக்கல்!..