வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (19:28 IST)

பிரசவம் முடிந்தது வயிற்றில் கத்தரிக்கோல் வைத்து தைத்த டாக்டர்: இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

scissor
அறுவைசிகிச்சை பிரசவம் முடிந்த பின் கத்தரிக்கோலை வயிற்றிற்குள் வைத்து தைத்த டாக்டர் ஒருவர் மீது வழக்கு தொடர்ந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.  குழந்தை பிறந்தவுடன் தையல் போடும் போது கத்திரிக்கோலை வயிற்றுக்குள்ளேயே வைத்து தைத்ததாக தெரிகிறது 
 
இதனை அடுத்து இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் 12 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது