அறுவை சிகிச்சை செய்த அழகி மரணம்! – பிரேசிலில் சோகம்!
பிரேசிலில் அழகி பட்டம் வென்ற இளம்பெண் ஒருவர் அறுவை சிகிச்சை செய்தபோது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் தென்கிழக்கு நகரமான மெகேயில் பகுயை சேர்ந்தவர் கிளெய்சி கொரிய்யா. பிரபலமான மாடலாக இருந்து வந்த இவர் கடந்த 2018ம் ஆண்டில் நடந்த மிஸ் பிரேசில் அழகி போட்டியில் அழகி பட்டத்தை வென்றவர். அதன்பின்னர் மெகேயிலில் ஒப்பனை நிபுணராக பணிபுரிந்து வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் டான்சில் பிரச்சினைக்காக தொடர் அறுவை சிகிச்சைகளை செய்துக் கொண்டதாக தெரிகிறது. இதனால் சில நாட்களில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் க்ளெய்சி. அங்கு அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்படுவது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக கோமா நிலையில் இருந்த க்ளெய்சி தற்போது உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.