1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sengottaiyan talk about edappadi palanisamy

2 நாட்கள் தூங்காமல் அழுதேன்!.. ஓப்பனாக பேசிய செங்கோட்டையன்!...

sengottaiyan
கூவத்தூரில் சசிகலா டிடிவி தினகரன் தயவால் முதலமைச்சரானவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் எப்போது முதலமைச்சரானாரோ அப்போது முதலெ சில அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க துவங்கினார்.. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின் கட்சி மற்றும் ஆட்சி இரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் சசிகலா விடுதலையாகி வந்த பின்னரும் அவரையும், டிடிவி தினகரனையும் கட்சிக்குள் விடவில்லை. இது சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது. எனவே பழனிச்சாமியை துரோகி என அவர்கள் விமர்சித்து வந்தார்கள். ஒருபக்கம் தனக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தையும் கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிசாமி.. அவர் மட்டுமல்ல, யாரெல்லாம் அவருக்கு எதிராக செயல்பட்டார்களோ அவர்கள் எல்லாவற்றையும் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து தூக்கினார்.

அதிமுகவிலிருந்து விடுபட்டு சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன் சொன்னதால் அவரையும் கட்சியிலிருந்து தூக்கினார் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து தன்னை தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார் செங்கோட்டையன்.

இந்நிலையில், தவெக தொடர்பான விழா ஒன்றில் பேசிய செங்கோட்டையன் ‘நான்தான் எடப்பாடி பழனிச்சாமியை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தினேன். நான் வளர்த்த ஒருவரே என்னை நீக்கியதை நினைத்து இரண்டு நாட்கள் தூங்காமல் அழுதேன்’ என சொல்லியிருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நீங்க என்ன பண்னி கிழிச்சீட்டீங்க!.. மோடியை அட்டாக் பண்ணும் திருமா!...