வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (15:58 IST)

பிரபல நடிகர் திடீர் மரணம்....ரசிகர்கள் அதிர்ச்சி

Chethana Raj
கர்நாட  மாநிலத்தில் கொழுப்பு குறைக்க பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த நடிகை சேத்தனா ராஜ்(21) உயிரிழந்துள்ளார்.

கன்னட  தொலைக்காட்சி நடிகை சேத்தனா ராஜ்  எடை குறைப்பு தொடர்பான அறுவைச் சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்ற பின்பு அவர் மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

நடிகை சேத்தனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் அவர் மரணம் அடைந்துள்ளதாகவும், மருத்துவர்களின் தவறான சிகிச்சையாலும் அலட்சியத்தாலும்தான் மகள் உயிரிழந்துள்ளதாக  அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும்,தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் சேத்தனால் இந்தச் சிகிச்சைக்குச் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், நுரையீரலில் அதிக நீர் சேர்ந்ததை அடுத்து அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் சேத்தனா ராஜ் உயிரிழந்தது தொடர்பாக அவரது பெற்றோர் போலீஸில் புகாரளித்துள்ளனர்