பிரேமலதா வைத்த கோரிக்கை!.. ஆடிப்போன பாஜக!.. நடந்தது என்ன?...
2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணிகளை உறுதி செய்யும் வேலைகளில் இறங்கியிருக்கிறது. ஏனெனில், பிப்ரவரி மாதம் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் உடனே பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். அதற்குள் தொகுதி மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சாரத்தை தொடங்க முடியும்.
திமுக வழக்கம் போல் தனது கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிடும். புதிதாக கமலின் மக்கள் நீதி மையம் அதில் இணைந்திருக்கிறது. ஒருபக்கம் அதிமுக, பாஜக அமமுக, அன்புமணி பாமக உள்ளிட்ட சில கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ளது. இதில், முடிவெடுக்காமல் இருக்கும் ஒரே கட்சி தேமுதிக மட்டுமே. அதிமுக, திமுக என இரண்டு தரப்பிலும் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு வார்த்தை நடத்திவருவதாக சொல்லப்படுகிறது.
துவக்கத்தில் 30 சீட்டும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் பிரேமலதா கேட்டதாக தெரிகிறது. ஆனால் தேமுதிகவின் வாக்கு வங்கி இப்போது ஒரு சதவீதத்திற்கும் கீழே போய்விட்டது. எனவே அவ்வுளவு தொகுதிகளை கொடுக்க முடியாது என அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே சொல்லிவிட்டதாம். ஒருவழியாக இறங்கி வந்த பிரேமலதா இப்போது 10 தொகுதிகள் மற்றும் மகன் விஜய பிரபாகரனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என கேட்கிறாராம். ஆனால் திமுக 6 தொகுதிகளையும், அதிமுக 8 தொகுதிகளும் கொடுக்க முன்வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் சென்னை வந்த பாஜக தேர்தல் வியூக அமைப்பாளர் பியூஸ் கோயல் டெல்லி செல்வதற்கு முன் தொலைபேசியில் பிரேமலதாவுடன் பேசி பேசிய போது என் மகனுக்கு மத்திய மந்திரி பதவி கொடுங்கள் என பிரேமலதா கேட்டதால் அதிர்ச்சியானதாக சொல்லப்படுகிறது.
எனவே பாஜக தரப்பிலிருந்து இனிமேல் தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சி நடைபெறாது என்கிறார்கள்.