புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஜனவரி 2020 (07:06 IST)

பள்ளி மாணவியுடன் காதல்; போக்ஸோ சட்டத்தில் சிக்கிய பாமக பிரமுகர்!

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பள்ளி மாணவியைக் காதல் வலையில் வீழ்த்தி தலைமறைவான போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சென்னை 102 வது வட்ட செயலாளராக இருப்பவர் டிபி சத்திரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ’ஆட்டோ சத்யா’.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர் பள்ளி மாணவி ஒருவரை ஆசை வார்த்தைக் காட்டி காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

இதையடுத்து கடந்த 27 ஆம் தேதி இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவியின் தாயார், காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது போலிஸ். பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு அவரை பெற்றொரிடம் ஒப்படைத்துள்ளது.