செவ்வாய், 1 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (17:25 IST)

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

இயக்குனர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல் என கேரள மாநில பாஜக தலைவர் கோபாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ’எம்புரான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படம் 200 கோடி ரூபாய் வசூலித்தாலும், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.
 
மோகன்லால் தனது பேஸ்புக் பக்கத்தில் வருத்தம் தெரிவிக்கும் அளவுக்கு சர்ச்சைகள் நீண்ட நிலையில், தற்போது பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்து தீவிரமாக போராட்டம் நடத்தி வருகிறது.
 
இந்த நிலையில் கேரள மாநில பாஜக தலைவர் கோபாலகிருஷ்ணன் இது குறித்து கூறிய போது, இயக்குனர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல் என்றும், ’எம்புரான்’ படம் ரிலீஸ் ஆனபோது இந்த படம் உலக அளவில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று அவரது மனைவி கூறியதையும் அவர் சுட்டிக் காட்டி உள்ளார்.
 
இந்த நிலையில், தனது மகன் மற்றும் மருமகளை வேண்டும் என்று கூறி வைக்கிறார்கள் என்று பிருத்விராஜ் தாயார் மல்லிகா சுகுமாரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva