சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!
சென்னையில் நாளை முதல் அதாவது ஏப்ரல் 2 முதல் 7 வரை முதல்முறையாக சபா கிளப் ஆடவர் கூடைப்பந்து தொடரம் நடைபெற உள்ளது.
இந்த போட்டி ஜவஹர்லால் நேரு உள்ளரங்க மைதானத்தில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா மட்டுமல்ல, பிற நாடுகளிலுமிருந்து அணிகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு அணி, கொழும்பு கூடைப்பந்து கிளப் (இலங்கை), டைம்ஸ் கூடைப்பந்து கிளப் (நேபாளம்), திம்பு மேஜிக்ஸ் (பூடான்), டிரெக்ஸ் கூடைப்பந்து கிளப் (மாலத்தீவுகள்) ஆகியவை கலந்துகொள்கின்றன.
இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் அனுசரணையில் நடத்தப்படும் இந்த முதலாவது சபா கிளப் சாம்பியன்ஷிப், வெற்றிபெறும் அணிக்கு மிக முக்கிய வாய்ப்பை வழங்குகிறது.
அவர்கள் மே மாதம் நடைபெறவுள்ள எப்ஜபிஏ டபிள்யூஏஎஸ்எல் இறுதிப் போட்டியில் விளையாட உரிமை பெறுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Edited by Mahendran