1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (21:45 IST)

7 பேர் விடுதலை ...ஆளுனரால் முடிவெடுக்க முடியவில்லை - ராமதாஸ் டுவீட்

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வரும் 7 பேரின்  விடுதலை குறித்து ஒன்றரை ஆண்டுகளாக ஆளுநரால் முடிவெடுக்க முடியவில்லை என பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
விடுதலை கோரும் கருணை மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுனருக்கு பேரறிவாளன் கடிதம். உச்சநீதிமன்றம் நினைவூட்டுகிறது, பேரறிவாளன் நினைவூட்டுகிறார்,  பா.ம.க. நினைவூட்டுகிறது. ஆனாலும் ஒன்றரை ஆண்டுகளாக ஆளுனரால் முடிவெடுக்க முடியவில்லை. வாழ்க ஜனநாயகம்! என தெரிவித்துள்ளார்