புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 27 ஜனவரி 2020 (10:57 IST)

காட்டுமிராண்டிகளா... சர்ச்சைக்குள்ளான விஷயத்தில் காட்டமான ராமதாஸ்!

பெரியார் சிலையை அவமதிப்போர் மற்றும் சேதப்படுத்துவோர் காட்டுமிராண்டிகள் என ராமதாஸ் சாடியுள்ளார்.
 
ரஜினிகாந்த் சமீபத்தில் கலந்து கொண்ட விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
 
இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் என்ற பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை திடீரென மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில் பெரியார் சர்ச்சையில் மெளனம் காத்த பாமக தலைவர் ராமதாஸ், பெரியார் சிலையை அவமதிப்போர் மற்றும் சேதப்படுத்துவோர் காட்டுமிராண்டிகள். இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
ஆனால் தற்போது சாலவாக்கம் களியப்பேட்டை கிராமத்தை சேர்ந்த பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் கோ. தாமோதரன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பாமகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.