மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!
நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை அடுத்து, அவர் விரைவில் தனது பிரதமர் பொறுப்பில் இருந்து விலகலாம் என்ற செய்திகள் பரவின.
இதற்கிடையில், அவருக்கு மாற்றாக அமித்ஷா அல்லது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் பதவியை ஏற்கலாம் என்ற தகவல்களும் வெளிவந்தன.
இந்நிலையில், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த யோகி ஆதித்யநாத், “நான் இப்போது முதல்வராக பணியாற்றுகிறேன், கட்சி தான் இந்த பொறுப்பை எனக்குத் தந்தது.
அரசியல் என்பது எனக்கு முழுநேர வாழ்க்கை அல்ல. கட்சி எந்த பொறுப்பை வழங்குகிறதோ அதை மேற்கொள்கிறேன். ஆனால் உண்மையில், நான் ஒரு யோகி. எனவே, ஒருநாள் இந்த பதவியையும் விட்டு செல்லவேண்டும்.
தலைமையுடன் கருத்து வேறுபாடு இருந்தால், இந்த பதவியில் நீடிக்க முடியாது. தேர்தலில் யாரை களமிறக்குவது என்பது கட்சி முடிவு. எந்த காரணமும் இல்லாமல் யாரும் எந்தவிதமான கூற்றுகளும் கூறலாகாது” எனக் குறிப்பிட்டார்.
Edited by Mahendran