வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (07:00 IST)

பெரியார் சிலையை சேதப்படுத்தியது பாமக நிர்வாகியா? அதிர்ச்சி தகவல்

பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தும் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் நேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் பேசிய நிலையில் இன்று அவரது கட்சித் தொண்டர் ஒருவரே அந்தப் பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்
 
இந்த நிலையில் செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் என்ற பகுதியில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை திடீரென மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து 4 பேரை சந்தேகத்தின் விசாரணை செய்து வந்தனர். இந்த விசாரணையின் முடிவில் பெரியார் சிலையை சேதப்படுத்தியது தாமோதரன் என்பவர் தெரியவந்தது. இவர் பாமக முன்னாள் ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பெரியார் சிலை உடைப்பு கண்டனம் தெரிவித்த டாக்டர் ராமதாஸ் தனது கட்சி தொண்டரே பெரியார் சிலையை உடைத்து இருப்பது தெரியவந்ததும் அவரை கட்சியில் இருந்து நீக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்