புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (12:14 IST)

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? பரபரப்பு தகவல் அளித்த பாமக தலைவர்!

ஏற்கனவே 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இந்த கல்வி ஆண்டு முதல் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது
 
இதன்படி இந்த ஆண்டு இந்த பொதுத் தேர்வை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது. 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்பட அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இது குறித்த போராட்டங்களும் நடைபெற்று வந்த இந்த நிலையில் 5 எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக அதிமுகவின் கூட்டணி கட்சியான பாமகவும அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பாமக தலைவர் ஜிகே மணி அவர்கள் ’5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை கைவிட பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி அளித்து உள்ளதாகவும் அதனால் போராட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் எனவே தமிழக அரசு இடமிருந்து 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து என்ற அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது