1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nainar nagendiran reply to tvk vijay

தம்பி விஜய்க்கு ஒன்னும் தெரியல!.. நயினார் நாகேந்திரன் பேட்டி!...

nainar
தவெக தலைவர் விஜய் இன்று பனையூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாவது துவக்க விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில் பேசிய விஜய் திமுக தீயசக்தி, அதிமுக ஒரு ஊழல் கட்சி என்று வழக்கம்போல் பேசினார்.. மேலும் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த போது அவரை என்னவெல்லாம் சொன்னார்களோ இப்போது அது என்னை சொல்கிறார்கள்..

தமிழகத்தில் வரும் 20206 சட்டமன்றத் தேர்தலில் மூன்று கூட்டணிதான் இருக்கின்றன.. ‘ஒன்று திமுக கூட்டணி.. இன்னொன்று பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் மக்கள் சக்தியான தவெக கூட்டணி’ என்று பேசியிருந்தார்.. அதாவது அதிமுக கூட்டணி என விஜய் சொல்லவே இல்லை..

பாஜக தலைமையில்தான் அதிமுக செயல்படுகிறது என்பதை மறைமுகமாக அப்படி சொல்லியிருந்தார்..  இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தம்பி விஜய்க்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறேன். என்.டி.ஏ என்றால் அதில் பாஜக, அதிமுக, தாமாகா என பல கட்சிகள் இருக்கிறதூ. இது கூட தெரியாம பேசிட்டு இருந்தா எப்படி?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திருச்சியில் திகில்: கல்லறையில் இருந்து வந்த பிரியாணி ஆர்டர் - அலறியடித்து ஓடிய டெலிவரி பாய்!