தொடர்புடைய செய்திகள்
- இபிஎஸ் முதலமைச்சராக வரவேண்டும் என்று கோவை மக்கள் வாக்களித்தார்கள்: எஸ்.பி வேலுமணி
- ஒல்லியா இருக்க உடம்பை வலுவாக்க இதை செய்யுங்க!
- நாட்டிலேயே ஊழல் அதிகம் செய்யும் கட்சி திமுக-மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
- தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பவர்களுடன் எதற்கு கூட்டணி? சட்டப்பேரவையில் ஈபிஎஸ் கேள்வி
- அதிமுக சின்னம், கொடியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
பாஜகவுடன் கூட்டணி இல்லை என அழுத்தமாகச் சொல்லுங்கள்- ஈபிஎஸ்
அடுத்தாண்டு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.
இக்கூட்டணியில் இருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக விலகியது.
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எழுதிய கடிதத்தில், பாஜகவுக்கு -நன்றி மீண்டும் வரவேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். இது வலைதளங்களில் ஹேஸ்டேக்காக வைரலானது.
இந்த நிலையில், தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிமுக தலைமை தயார் செய்து வருகிறது.
இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், தேர்தல் பணியில் மாவட்ட செயலாளர்களின் தலையீடு இருந்தால் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்றும், மாவட்டசெயலாளர்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்காமல், கட்சிக்காக தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
