ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 16 அக்டோபர் 2023 (16:30 IST)

நாட்டிலேயே ஊழல் அதிகம் செய்யும் கட்சி திமுக-மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

அடுத்தாண்டு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.

இக்கூட்டணியில் இருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக விலகியது.

இந்த  நிலையில்,  வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் செய்வோம் என்று  மத்திய அமைச்சர் பியூஸ் கோயம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்  மாவட்டத்திற்கு  வருகை புரிந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று கூறியதாவது:

''பிரதமர்  நரேந்திர மோடி உங்களில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாரிசு அரசியல் போல இல்லாமல், சாதாரண விவசாயி மகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். தமிழ் நாட்டில் பாஜகவிற்கு வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் செய்திடுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,  ''நாட்டிலேயே ஊழல் அதிகம்  செய்யும் கட்சி திமுக ''என்று தெரிவித்துள்ளார்.