1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (12:12 IST)

வங்க கடலில் உருவாகிறது ‘சிட்ரங் புயல்’; தமிழகத்திற்கு ஆபத்தா?

வங்க கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலம் நெருங்கி வரும் நிலையில் வங்க கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சியால் தொடர்ந்து பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வடமேற்கில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அக்டோபர் 22ம் தேதி வாக்கில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள இந்த புயலுக்கு ‘சிட்ரங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் உருவான பிறகு அது பயணிக்கும் திசையை பொறுத்தே வலுபெறுமா? எந்த இடத்தில் கரையை கடக்கும் போன்ற தகவல்களை கணிக்க இயலும் என்றும் கூறப்படுகிறது.

Edited By: Prasanth.K