1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cyclone warning to tamil nadu ports

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு!

cyclone
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதை அடுத்து தமிழக துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளன. 
 
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
 
நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்றும், எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்றும், அதேபோல் பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது ஆகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 
அடுத்த கட்டுரையில்
HIV- பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட 15-வயது சிறுமி: இளைஞர் கைது!