வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்ற வாய்ப்பு இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் மழை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
ஏற்கனவே தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது