வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (12:07 IST)

மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணித்தால்... ஓட்டுநர்களுக்கு முக்கிய சுற்றறிக்கை!

bus student
மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணித்தால்... ஓட்டுநர்களுக்கு முக்கிய சுற்றறிக்கை!
பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. 
 
பள்லி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் விபத்து ஏற்பட்டு இதனால் சில உயிர்கள் பலியாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இதன் காரணமாக மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்க தகுந்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டில் அல்லது மேற்கூரையில் பயணம் செய்தால் உடனடியாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அருகிலுள்ள காவல்  நிலையத்திற்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குக்கும் தகவல் அனுப்ப வேண்டும் என போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran