செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 27 பிப்ரவரி 2021 (18:53 IST)

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு !

அதிமுக –பாமக இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளாது. ஒப்பந்தப்படி பாமகவிற்கு 23 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இன்று காலைமுதல் அதிமுக கட்சியுடன் ராமதாஸ் தலைமையிலான பாமக கட்சி கூட்டணி குறித்துப் பேச்சு வார்த்தை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.

 
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளதாவது :

அதிமுக –பாமக இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளாது. ஒப்பந்தப்படி பாமகவிற்கு 23 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு தனி இட  ஒதுக்கீடு பெறப்பட்டதற்காக தொகுதி எண்ணிக்கையை நாங்கள் குறைத்துப் பெற்றுள்ளோம். ஆனாலும் எங்களின் பலம்  குறையாது என அன்புமணி ராதமாஸ் கூறியுள்ளார்.