அதிமுகவினரின் ரூ.1 கோடி பரிசுப்பொருட்கள் சிக்கியது !

Sinoj| Last Modified சனி, 27 பிப்ரவரி 2021 (18:05 IST)
 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்தனர்.

இந்நிலையில், அதிமுகவினர் மக்களுக்குக் கொடுப்பதற்கு வைத்திருந்த பரிசுப்பொருட்கள் சிக்கியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பாறைமேட்டில் வாக்காளர்கள் சுமார் 20 ஆயிருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்களை அங்குள்ள 20 ஆயிரம் பேருக்கு வழங்குவதற்கு வைக்கப்படிருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், அதிமுகவின் வைத்திருந்த பரிசுப்பொருட்களை திமுகவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.இதில் மேலும் படிக்கவும் :