தினகரன் கட்சிக்கு பச்சைக்கொடி காட்டிய கமல்ஹாசன் !
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை ச.ம.க தலைவர் சரத்குமார் நடிகர் கமல்ஹாசனை சந்தித்துப்பேசினார். ஏற்கனவே சமக அதிமுகவில் இருந்து வெளியேறி, திமுகவில் இருந்து வெளியேறிய ஐஜேகே கட்சியுடன் அக்கட்சி கூட்டணி வைத்துள்ளதால் கமலின் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், தற்போது, தினகரனின் அமமுக கட்சி கூட்டணிக்கு வந்தால் வரவேற்கத் தயார் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
அதேசமயம் எந்தக் கட்சி கூட்டணிக்கு வந்தாலும் முதல்வர் வேட்பாளர் நான் தான் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ. கருப்பையா போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.