செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 27 பிப்ரவரி 2021 (18:42 IST)

கீர்த்தி சுரேஷின் 'ராங் தி 'பட சிங்கில் ரிலீஸ் ...இணையதளத்தில் வைரல்

கீர்த்தி சுரேஷ் தற்போது நடித்துவரும் ராங் தி படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடல் பஸ்டே இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது செல்வராகவனுடன் சானிக் காயிதம் மற்றும் தெலுங்கில் நிதினுடன் ராங் தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர் நிதின். இவர் நடிப்பில் உருவாகி வரும் படம்

ராங் தி. இப்படத்தின் ஷூட்டிங் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தை இயக்குநர் வெங்கி அள்ளுரி இயக்கியுள்ளார்.

நிதினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ராங்கே டே படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் சிறந்த முறையில் பாடல்கள் உருவாக்கி வருகிறார்.

இப்படத்தின் இடம்பெற்றுள்ள ஒரு படலை கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளருடன் இணைந்து பாடியுள்ளார்.

இவர்கள் இருவரும் இணைந்து பாடும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராங் தி படத்தின் பஸ்டே பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்பாடல் வைரலாகி வருகிறது.

இப்பாடலின் லிங்க் கீழே உள்ளது.