45 நிமிடங்களில் வந்திறங்கிய மனித இதயம் !

Sinoj| Last Modified சனி, 27 பிப்ரவரி 2021 (18:03 IST)

எங்கேயாவது மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு தானம் கொடுக்கப்படுவது வழக்கம். அவர்கள் இறந்தாலும் அவர்களின் உடல் உறுப்புகள் குறிப்பிட்ட நேரத்தில் மற்றவர்களுக்குச் செலுத்துவதன் மூலம் அவர்களின் ஆயுள் அதிகரிக்கிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் சுமார் 45 நிமிடங்களில் விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து குரோம்பேட்டையிலுள்ளா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு குறிப்பிட்ட நோயாளிக்குப் பொருத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

குறுகிய நேரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :