தொடர்புடைய செய்திகள்
- அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கல்?
- சூடுபிடிக்கும் தேர்தல் களம்: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுக - பாஜக!
- ரஜினி - கமலுக்கு தூது விட்ட சரத்: கூட்டணி பலம்பெறுமா?
- அமைச்சருடன் பிரசாரத்தில் பங்கேற்ற நடிகர் சிங்கமுத்து
- அதிமுக கூட்டத்தில் காலி சேர்களை படம் பிடித்த நிருபருக்கு அடி உதை - மன்னிப்பு கேட்ட அமைச்சர்!
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 24 தொகுதிகள் ஒதுக்கீடு??
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளனர்.
இன்று காலைமுதல் அதிமுக கட்சியுடன் ராமதாஸ் தலைமையிலான பாமக கட்சி கூட்டணி குறித்துப் பேச்சு வார்த்தை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெருகிறது.
இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, மற்றும் பாஜக கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தெரிந்துவிடும். அநேகமாக பாமகவுக்கு 24 தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
