வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (09:22 IST)

மோடிக்கு கல்லூரி மாணவி எழுதிய கடிதம்.. அதிரடியாக செயல்பட்ட மோடி..

ஒரு கல்லூரி மாணவி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்திற்கு மோடி என்ன நடவடிக்கைகள் எடுத்தார் என்று பார்க்கலாம்

கர்நாடக மாநிலம், ஹொசனகோரா கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற கல்லூரி மாணவி மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தனது கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அதனை தயவு செய்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கடிதத்தை படித்த மோடி, மாநில தலைமை செயலாளர் விஜயபாஸ்கரிடம் இந்த கடிதத்தை கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். இதனைத் தொடர்ந்து ஹொசனகோரா பஞ்சாயத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சாலைகளை சீரமைக்குமாறு விஜயபாஸ்கர் கூறினார். தற்போது சாலைகளை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தனது கடிதத்துக்கு மோடி உடனடியாக நடவடிக்கை எடுத்ததில் அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.