வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (14:36 IST)

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு விருது ! மத்திய அமைச்சர் தகவல்

கடந்த 02- 10 -14 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால்  தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவைக் காணவேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் திட்டமாகவும் இது பார்க்கப்பட்டு மத்திய அரசால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இதன் அடிப்படையில் கிராமங்களில் கழிப்பறைகள் கட்டுவது, சுகாதாரம் பேணுவது , கிராமத்திற்காம பொதுக்கழிவறை,நகர்ப்புறங்களில் கழிவறை, பள்ளி கல்லூரிகளில் கழிவறை, பெண்களுக்கான் தூய்மை பிரச்சாரம் போன்ற திட்டங்கள் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த தூய்மை இந்தியா திட்டத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் விளம்பரதூதர்களாக இருக்கின்றனர்.
 
இந்த பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டு நாட்டில் சிறப்பான முன்னேற்றம் அடைந்திருக்கும் இந்தத்திட்டம் அனைந்து நாடுகளாலும் கவனிக்கப்பட்டு பாராட்டப்படுகிறது.
 
இந்நிலையில் அமெரிக்கா செல்லவுள்ள பிரதமர் மோடிக்கு, தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தியதற்காக  உலகமகா கோடீஸ்வரரான பில் கேட்ஸின் அறக்கட்டளை சார்பில் அவருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளதாக மத்திய இணையமைச்சார் ஜிதேந்திர சிங் தகல் தெரிவித்துள்ளார்.