செவ்வாய், 1 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (15:09 IST)

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தவறு செய்தவர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடிப்பது போல, தமிழகத்தில் வரி கட்டாதவர்களின் வீடுகளில் அராஜகம் செய்யப்படுகிறது என மக்கள் கொந்தளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, தண்ணீர் வரி ஆகியவை கறாராக வசூல் செய்யப்படுகின்றன. இந்த நிலையில், வரி செலுத்தவில்லை என்பதற்காக, கடப்பாரையுடன் ஒரு வீட்டு வாசலில் அதிகாரிகள் நின்ற வீடியோ இணையத்தில் வைரலானது.
 
மதுரையில் சொத்து வரி செலுத்தாத ஒரு நிறுவனத்தின் வாசலில் குப்பை தொட்டி வைக்கப்பட்டதாகவும், காரைக்குடி மாநகராட்சியில் வரி கட்டவில்லை என்பதற்காக ஓட்டல் வாசலில் குப்பை தொட்டி வைப்பதாகவும் கூறப்படுகிறது.
 
சென்னையில், 1800 ரூபாய் தண்ணீர் வரி கட்டவில்லை என்பதற்காக வீட்டை ஜப்தி செய்வேன் என்று நோட்டீஸ் கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
உத்தரப் பிரதேசத்தில் தவறு செய்தவர்களின் வீடுகளை புல்டோசர் வைத்து இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது போல, தமிழகத்தில் அராஜகமாக வரி வசூல் செய்யப்படுகிறது என மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
 
வரி கட்டுவதற்கு உரிய முறையில் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், இதனால் அரசுக்கு தான் கெட்ட பெயர் ஏற்படும் என்றும் ஆளுங்கட்சியில் உள்ள பிரபலங்களே ஆதங்கப்படுகின்றனர். இந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
Edited by Mahendran