திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (14:19 IST)

மாமல்லபுரத்தில் மோடி & ஜி ஜின்பிங் ! – பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதம் !

அடுத்த மாதம் இந்திய பிரதமர் மோடியும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கும் தமிழகத்தின் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க வரவுள்ளனர்.

இந்தியா-சீனா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவிவரும் நிலையில், சீனாவிலுள்ள உகான் நகரில் தல் முறைசாரா உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் இந்திய பிரதமர் மோடியும் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொண்டனர்.

இரு நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு வரும் அக்டோபர் மாதம் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள சீன பிரதமர் ஜி ஜின்பிங் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மோடியும் ஜி ஜின் பிங்கும் மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்களை பார்வையிடுவார்கள் என தெரிகிறது.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. விரைவில் சீன அதிகாரிகளும் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.