செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (13:24 IST)

கட்டணத்தை உயர்த்திய சுங்க சாவடிகள் – மேலும் மேலும் அதிர்ச்சி

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பொருளாதாரரீதியான சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னால் அளவுக்கதிகமான கடன் வைத்திருப்பதால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை சாலைகள் அமைக்கும் பணியை நிறுத்தும்படி பிரதமர் அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தற்போது அதிகரித்து வரும் கடன் பிரச்சினையை சரிசெய்ய சுங்க வரியை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். முதலில் சிறிய சுங்க சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கும் என்றும், சிறிது நாளில் அனைத்து சுங்க சாவடிகளிலும் கட்டணம் அதிகரிக்கப்படுமென்றும் கூறப்படுகிறது.

தற்போது பஸ், கார், வேன் என வாகனக்களுக்கு ஏற்றவாறும், பயணிகளுக்கு ஏற்றவாறும் பல வகைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க கட்டணம் 4 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

சரக்கு வாகனங்களுக்கும் சுங்க வரி அதிகரிக்கப்படும் என்பதால் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சரக்கு கொள்முதல் செய்வோரும் ஏற்கனவே விற்பனை வரி, ஜிஎஸ்டி ஆகியவற்றால் திண்டாட்டத்தில் இருக்க, இந்த சுங்கவரி உயர்வு உள்ளூர் வணிகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.