செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 ஜூலை 2018 (15:36 IST)

பசு வன்முறைகளுக்கு மாநில அரசுகள்தான் பொறுப்பு; உள்துறை அமைச்சர் பொறுப்பற்ற பதில்

பசுக் காவலர்கள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளுக்கு மாநில அரசுகள்தான் பெறுப்பு என்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பொறுப்பற்ற பதிலால் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

 
பசுக் காவலர்கள் என்ற பெயரில் வன்முறைகளும், கொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பசுக்காவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை சகித்து கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்ரம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  
 
இந்நிலையில் இன்று லோக் சபாவில் பசுக்காவலர்கள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகள் குறித்து காங்கிரஸ் எம்பிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பெரும்பாலான சம்பவங்களில் உறுதிப்படுத்தப்படாத பொய் செய்திகளே காரணமாக உள்ளன என்றும் பொதுமக்கள் பிரச்சனை என்பது மாநிலங்களின் விஷயம் என்று கூறினார். 
 
மேலும் இதற்கான விளக்கத்தையும் அவர் கூறினார். ஆனால் அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து, பதில் அதிருப்தி அளிப்பதாகக் கூறி காங்கிரஸ் எம்பிகள் வெளிநடப்பு செய்தனர்.