செவ்வாய், 1 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (14:17 IST)

கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு.. முதல் விவசாய பொருளுக்கு கிடைத்த பெருமை..!

ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு அங்கீகாரம் பெற்ற மற்றும் தனிப்பட்ட வகையான பொருட்களை அடையாளம் கண்டு அவற்றுக்கு சட்டப்படி பாதுகாப்பு வழங்குவதற்காக புவிசார் குறியீடு  வழங்கப்படுகிறது. 
 
இதன் மூலம், திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு, மதுரை மரிக்கொழுந்து, விளாச்சேரி களிமண் பொம்மை போன்ற பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், கும்பகோணம் வெற்றிலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்ததாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார். முக்கியமாக, கும்பகோணம் வெற்றிலை முதன்முதலில் விவசாய பொருளாக புவிசார் குறியீடு பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும், வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
 
Edited by Siva